வீட்டுக்கு ஓனர் போல கம்பீரமாக உள்ளே புகுந்த திருடன்… பட்டப்பகலில் சைக்கிளுடன் எஸ்கேப் ; வெளியானது சிசிடிவி காட்சி

Author: Babu Lakshmanan
18 February 2023, 8:46 am

பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் லயன்ஸ் கிளப் ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். இவர் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஆகியவற்றை நேற்று நிறுத்தி வைத்திருந்தார். மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த இருபதாயிரம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.

மாலையில் வந்த போது சைக்கிளை காணாததால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை போட்டு பார்த்த போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டிற்கு வருவதும், கதவை எட்டிப் பார்த்து அதை திறந்து உள்ளே சென்று சைக்கிளில் திருடி செல்வதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மனோகரன் பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

பழனியில் சமீப காலமாக இருசக்கர வாகனத்தை விட்டு அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே இது போல திருட்டுகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே போலீஸார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு திருடர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 443

    0

    0