வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பகீர்…!!!
Author: Babu Lakshmanan27 July 2023, 9:41 pm
கன்னிவாடி அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா? தற்கொலையா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடைப்பதாக கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வனப் பகுதிக்குள் சென்ற கன்னிவாடி போலீசார் கன்னிமார் கோயில் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசிவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணை சடலமாக இருந்தது கன்னிவாடி அருகே உள்ள தோனி மலையை சேர்ந்த ஆண்டியம்மாள் 60 என்பது தெரிய வந்தது.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஆண்டியம்மாள் காணாமல் போனதாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது காட்டுப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலமும் ஒன்றாக இருக்குமோ என்று கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.