10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… ஐஏஎஸ் ஆவதே இலட்சியம் என மாணவி காவ்ய ஸ்ரீயா பேச்சு..!!
Author: Babu Lakshmanan10 May 2024, 12:56 pm
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்தள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டு புதுரை சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி. இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களது மகள் காவிய ஸ்ரீயா, ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அக்ஷயா அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தார்.

மேலும் படிக்க: ‘விரைவில் நாம் சந்திப்போம்!’…. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன நடிகர் விஜய்..!!
இந்நிலையில், இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 499 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்தார்.
இது தொடர்பாக மாணவி கூறுகையில், “எங்களது குடும்பம் விவசாய குடும்பம். எனது தாய், தந்தையர் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்து வருகின்றனர். அதேபோல் ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதுணையால் தற்போது அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. எனது லட்சியம் ஐஏஎஸ் ஆக வெற்றி பெறுவது. விவசாய குடும்பத்தில் இருந்து படித்து தற்போது வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கூறினார்.