குடைபிடித்தபடி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ; அரசுப் பேருந்தின் அவலம் ; முனுமுனுக்கும் பயணிகள்..!!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 12:43 pm

திண்டுக்கல்லில் அரசு பேருந்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து மழை நீர் விழுந்ததால், குடைப்பிடித்தவாறு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது.

பேருந்து நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வரும் போது மழை பெய்யத் தொடங்கியது. அரசு பேருந்தில் மேற்கூரை பகுதியில் பழுதின் காரணமாக ஆங்காங்கே ஓட்டை மற்றும் விரிசல் இருந்ததன் காரணமாக, மழை நீர் பேருந்தின் இருக்கைகள் மற்றும் உள்பகுதியில் மழைநீர் பேருந்திற்குள் கொட்டியது.

இதனால் பேருந்தில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாத நிலையில், குடை பிடித்தவாறு அரசு பேருந்தில் பயணிகள் பயணம் செய்து வந்துள்ளனர்.

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு பேருந்து முறையாக பராமரிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இயக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 334

    0

    0