அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் உணவுத்துறை அமைச்சரா..? அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 4:32 pm

திண்டுக்கல் பொன்னகரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமாருக்கு உணவுத்துறை அமைச்சர் என அடிக்கல் நாட்டு விழா பேனரில் பதிவிட்ட அரசு துறை அதிகாரிகளால் நலத்திட்டம் பெற வந்த பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பொன்னகரம் பகுதியில் இன்று பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கும் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டிய அந்த பேனரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐபி செந்தில்குமார் உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் என பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் பெயர் பதிவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு மற்றும் குழப்பம் நிலவியது.

மேலும் பேனரில் ரெண்டலை பாறைக்கு பதிலாக இரண்டலைப்பாறை என எழுத்துப் பிழைகளும் இருந்தன. தனியார் பள்ளி அருகே விழா ஏற்பாடு செய்ததினால், மைக் செட்டினால் மாணவர்களுக்கு கல்வி பயில தொந்தரவாக இருந்ததாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என புலம்பிக் கொண்டு சென்றனர்.

அரசு துறை அதிகாரிகள், பள்ளி வளாகம் மற்றும் பேனர் ஆகியவற்றை கவனிக்காமல் விழா ஏற்பாடு செய்தது விழாவிற்கு வந்த அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 289

    0

    0