மாசித்திருவிழாவையொட்டி பில்லமநாயக்கன்பட்டியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்… தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!!

Author: Babu Lakshmanan
9 March 2022, 9:25 am

திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மொத்தம் 700 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்கச்செயின், எல்இடி டிவி, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையாளராக வந்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1303

    0

    0