சின்னத்தால் வந்த சிக்கல்… திண்டுக்கல் லியோனியால் அதிர்ந்து போன திமுக தொண்டர்கள்… பிரச்சாரத்தில் சலசலப்பு..

Author: Babu Lakshmanan
2 April 2024, 8:30 am

மதுரை சோழவந்தானில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட ஐ.லியோனி சின்னத்தை மாற்றி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக மதுரை மாவட்டம் சோழவந்தானில் திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக, கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அரிவாள் சுத்தியல் சின்னத்தில் வாக்களியுங்கள் என தவறுதலாக கூறிவிட்டார்.

மேலும் படிக்க: தேர்தல் களம் திமுக VS அதிமுக என மாறுகிறதா?… பரிதவிப்பில் தமிழக பாஜக!

திமுகவினர் குறுக்கிட்டு உதயசூரியன் என சொல்லுங்கள் என கூறியதால் சுதாரித்துக் கொண்ட லியோனி, நான் முன்னதாக மதுரை மாநகர் பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டதால், அதே ஞாபகத்தில் சின்னத்தை தவறாக கூறிவிட்டேன் என்று சமாளித்துகொண்டே தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: சாதியக் கொடுமைகளுக்கு காரணமே பிராமணர்கள்தான்.. பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

எந்த கட்சிக்கு,எந்த சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்துள்ளார் என திமுக வினர் மற்றும் பொதுமக்களிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

  • Good Bad Ugly Second Song Promo மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!