தீபாவளியையொட்டி கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… கேள்வி கேட்ட பாஜக நிர்வாகி மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்.. நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 3:41 pm

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்ட பாஜக நிர்வாகியை கொலைவெறியுடன் தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே தேசிய நான்கு வழிச்சாலை சிப்காட் பகுதியியுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கடையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது. அது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தம்பி அழகர்சாமி, அங்கு சென்று இது போன்ற விழாக்காலத்தில் அடிகடி அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு யார் விற்க சொன்னது என கேட்டு கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

dindugal bjp - updatenews360

அப்போது அங்கிருந்த பார் உரிமையாளர் மற்றும் திமுகவினர் சிலர் அழகர்சாமியை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியதாகவும், இதில் அழகர்சாமி தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அழகர்சாமி மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பலத்த காயம் என்பதால் அவர்மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவம் குறித்து அமையநாயக்கனூர் காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜகவினர் நள்ளிரவில் காவல் நிலையத்தில் குவிந்து முற்றுகையிட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

dindugal bjp - updatenews360

மேலும், தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி திமுகவினர் உதவியுடன் டாஸ்மாக் ஊழியர்கள் அதிக விலைக்கு விற்றது குறித்து நியாயம் கேட்ட பாஜக நிர்வாகியை திமுகவினர் மற்றும் பார் உரிமையாளர்கள் சராமரி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 496

    0

    0