பட்டப்பகலில் பயங்கரம்… வீடு புகுந்து மனைவி கண்முன்னே கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 9:48 pm

பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசிஇருளப்பன் (42). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த ராசி இருளப்பனை, இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு வெளியே இருந்து கூப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ராசி இருளப்பன் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் ராசிஇருளப்பனை மனைவி கண் முன்னே கொடூரமாக வெட்டினர்.

இதில், பலத்த காயமடைந்த ராசிஇருளப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!