அதிமுகவில் இருந்த தடைகல் (ஓபிஎஸ்) நீங்கி விட்டது… இனிமேல் வெற்றிதான் : நத்தம் விஸ்வநாதன்…!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 10:52 am

அதிமுகவில் இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து விட்டதால், அதிமுகவில் இருந்த தடைகல் நீங்கி விட்டது என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வரும் காலங்களில் தேர்தலில் வெற்றி பெற கூப்பன்கள் மற்றும் பணம் வழங்குதல் முக்கியம் ஆனாலும் பணம் மட்டுமே வெற்றியை தேடி தராது கழகத் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசிய சர்ச்சையை பேச்சு

திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக நத்தம் விஸ்வநாதன் அவர்களும், அதிமுகவின் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டமாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்பு நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது :- தற்பொழுது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் 99.9 சதவீதம் பேர் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 0.1 சதவீதம் பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதம் இருக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் மக்களிடம் கூப்பன் தருவது பணம் வழங்குவது பணம் வழங்குவது முக்கியம். ஆனால் பணம் என்பது வெற்றிக்கு இரண்டாவது தேவை நிர்வாகிகள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும், என பேசினார். மேலும் இன்றைக்கு மக்கள் எடப்பாடியார் அவர்களை நம்பத் தொடங்கி விட்டனர். நம்மிடம் இருந்த ஒரே தடைகல் நம்மை விட்டு நீங்கி விட்டது.

தமிழகத்திலே அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முடியாமல் போனதற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும், அதில் ஒரு காரணம் நம்மிடம் தோளில் உட்கார்ந்து கொண்டு, தலைமை ஏற்றுக்கொண்டு, கழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டு, கழகத்திற்காகவே குழி பறித்த நபரான ஓபிஎஸ் அவர்களை இன்று நாம் அனைவரும் கழகத்தை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறோம். திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவிற்கு எந்த காலத்திலும் விசுவாசமாக இருந்ததில்லை.

எங்கே இருக்கிறாரோ அதற்கு எதிராகத்தான் செயல்படுவார். தம் இருக்கும் இடத்தில் இருந்து எதிராளிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்பவர் தான் ஓ பன்னீர்செல்வம். திருமதி சசிகலா அவர்களை நாம் எதிர்த்த போது, அவரிடம் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்வது, அதேபோல அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுடன் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்வது அவருடைய பாணி, என கழகத் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்தார்.

அதன் பின்னர் நிர்வாகிகள் மத்தியில் அதிமுக பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :- நடந்து முடிந்த பொதுக்குழுவில் கேட்டேன் அப்பொழுது நான் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். நல்ல விஷயம் தான். நம்முடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் என்பவர் இருப்பார் மாவட்ட ஆட்சியர் இல்லாத நேரங்களில் அவரிடம் தனது பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவித்துச் செல்வார்.ஆனால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் அவர்தான் அவருக்கான பொறுப்பினை வகிக்க முடியும். வருவாய் அலுவலர் போய் நான் தான் மாவட்ட ஆட்சியர் என தெரிவிக்க முடியாது.

முறையான ஐஏஎஸ் அதிகாரி மாவட்ட ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மட்டுமே இந்த பணியை மேற்கொள்ள முடியும். அதுபோலத்தான் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அம்மா அவர்கள் மூன்று முறை முதலமைச்சர் ஆக்கினார்கள். என்னை அனைவரும் வந்து வணங்குங்கள் என தெரிவிப்பது மிகவும் ஒரு மோசமான செயல், என அவர் பேசினார்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!