கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 8:49 am

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35) அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள், மகள் ராசாத்தி, மருமகன் லட்சுமணன் ஆகியோர் வீட்டில் அமர்ந்திருந்த போது, மர்ம நபர்கள் கையில் கூர்மையான ஆயுதங்களுடன் திடீரென புகுந்து தாயையும், மகளையும் கொடூரமாக வெட்டினர். தடுக்க வந்த மருமகன் லட்சுமணனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். வெட்டுப்பட்ட தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

மருமகன் லட்சுமணனுக்கும் வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீஸர் வழக்கு பதிவு செய்து, எதற்காக தாயையும், மகளையும் கொலை செய்தார்கள்..? கொலை செய்தவர்கள் யார்…? இவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் முன் பகை ஏதும் உள்ளதா..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம கும்பல் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாயையும், மகளையும் கொடூரமான முறையில் கொலை செய்து, மருமகனுக்கும் கத்தி கொடுத்து விழுந்தத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 548

    0

    0