திருமண பத்திரிக்கையில் விடுபட்டு போன பெயர்… ஆத்திரத்தில் தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற பேரன்..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 5:00 pm

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் குடிபோதையில் பேரன் தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரியாம்பட்டி கிழக்குத் தெருவில் குடியிருந்து வரும் ஆச்சிமுத்து (78) என்பவர் வீட்டில் இருக்கும்போது, நேற்று இரவு பேரன் மருதை (25) என்பவர் குடிபோதையில் தாத்தாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, கோபத்தில் அரிவாளால் தாத்தா ஆச்சிமுத்துவின் வெட்டியதில் கழுத்து மற்றும் வாய் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக காவல்துறையினர் சம்பவ இடம் சென்று ஆச்சிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் போது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

அதன் பேரில், பிரேத பரிசோதனை அறையில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை செய்ததில், மருதையின் சித்தப்பா மருதுபாண்டி என்பவருடைய மகளுக்கு கடந்த வாரம் திண்டுக்கல் நல்லாம்பட்டியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண பத்திரிக்கையில் தனது குடும்பத்தாரின் பெயர்களை பத்திரிகையில் போடாத காரணத்தினால் ஆத்திரத்தில், நேற்று காலை மருதுபாண்டி வீட்டுக்கு சென்று, மருதை தகராறு செய்து, உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சென்றுள்ளார். இது சம்பந்தமாக தாத்தா ஆச்சிமுத்து, பேரன் மருதையை கண்டிக்கும் போது, வாக்குவாதம் ஏற்பட்டு மருதை தாத்தாவை அரிவாளால் வெட்டி உள்ளார். பேரன் ஆச்சிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 338

    0

    0