திண்டுக்கல் ; பழனியில் 200 ரூபாய் பணம் கேட்டு தொழிலாளியிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகே உள்ள நரிக்குறவர் காலணியில் வசித்து வருபவர் வினோத் (32). இவர் பழனி அடிவாரம் பகுதிதியில் ஊசி, பாசி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வினோத் (32) இன்றும் ஊசி மற்றும் பாசி விற்பனை செய்து வந்தார். மாலை 3.30 மணியளவில் அடிவாரம் சன்னதி வீதியில் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த மூன்று பேர் வினோத்திடம் 200 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
அப்போது, தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்த வினோத்திடம், அவரது சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை விட்டு தேடியுள்ளனர். அதை வினோத் தடுத்ததால், ஆத்திரமடைந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியதை எடுத்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் வினோத் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் படுகாயம் ஏற்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட இருந்தவரை பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வினோத்தை பணம் கேட்டு தாக்கிய அடிவாரம் பகுதியை ஸ்ரீகுமார் மற்றும் விக்ரம் என்கிற இருவரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
This website uses cookies.