பெட்ரோல் நிரப்பும் போது வெளியேறிய புகை.. ஊழியர்களின் சாமர்த்தியம் : எரிந்து சாம்பலான ஆம்னி வேன்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 4:04 pm

திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக, அதே ஊரைச் சார்ந்த ஓட்டுனர் மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். அதில், இ. சித்தூரைச் சார்ந்த நாகேந்திரன் (26), விக்னேஷ் (18) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

அப்போது, மூவரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்த போது, என்ஜின் கோளாறு காரணமாக மளமள என தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக வாகனத்தை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை உடனடியாக அணைத்தனர்.

இதனால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்ரோல் பங்கில் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!