பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் எங்கே..? விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு ; பாஜகவினர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 1:11 pm

திண்டுக்கல் ; தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் தமிழக கரும்பு விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசால் கரும்பு, வெள்ளம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய திமுக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி மற்றும் சர்க்கரை மட்டும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனால், பொங்கல் பண்டிகை தினத்திற்கு கரும்புகள் தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்ற நோக்கில், விவசாயம் செய்து வந்த விவசாயிகள், தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதியார் ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் பல வருடங்களாக கரும்பு, வெள்ளம், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போதைய திமுக அரசு அனைத்து பொருட்களையும் நிறுத்தி உள்ளதால், ஏழை பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே, தமிழக அரசு வீடு மாநிலங்களில் கொள்முதல் செய்யும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நிறுத்திவிட்டு, தமிழகத்திலேயே ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்கள் வழங்க வேண்டும், என கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி