ஒட்டப்பிடாரம் அருகே தெரு விளக்குகளை அணைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், நன்கு கவனித்த பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தை சேர்ந்த தேன்ராஜ் மகன் கனகராஜ் (24) என்பவர் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கனகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் வீட்டிற்கு திருடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டின் உரிமையாளரை கண்டதும் கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் . அப்போது, மாடசாமி தெருப்பகுதியில் நின்று திருடன் திருடன் கூச்சலிடவே, அப்பகுதி பொதுமக்கள் சத்தம் கேட்டு, திருடனை சல்லடை போட்டு தேடியுள்ளனர். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் திருடன் கனகராஜ் பதுங்கி இருந்ததை பார்த்த பொதுமக்கள், அவனை பிடிக்க விரட்டி சென்ற போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.
உடனே திருடன் கனகராஜை பிடித்து கை, கால்களை கயிற்றால் கட்டி நன்கு கவனித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த
எப்போதும்வென்றான் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் திருடன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து திருடனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கனகராஜ் மீது ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.