இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி… ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ; திண்டுக்கல்லில் பரபரப்பு!
Author: Babu Lakshmanan20 February 2023, 7:29 pm
திண்டுக்கல் ; தனக்கு சொந்தமான இடத்திற்கு வாடகைதாரர் மாநகராட்சியில் வரி கட்டி இடத்தை அபகரிப்பு முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெட்ரோல் கேனுடன் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மெங்கில்ஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சகாய மேரி, மாமியார் மேரி சிங்கராயர் ஆகியோர் ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். முன்பக்கம் இருந்த கடைகளை அஞ்சலி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சக்கரை பாண்டிக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். இதில் சக்கரபாண்டி தம்பி ரவி என்பவர், தங்களது இடத்தில் இருக்கும் அந்தக் கடைக்கு மாநகராட்சியில் வரி ரசீது செலுத்தியுள்ளனர்.
அதனை அறிந்த மேரி சிங்கராயர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக ரவுடி கும்பலை சேர்த்துக்கொண்டு தற்பொழுது அவர்கள் குடியிருக்கும் வீட்டையும் விட்டு வெளியே செல்லுமாறு அடிக்கடி தகராறு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் உயிருக்கும் தங்கள் இடத்திற்கும் உத்தரவாதம் கேட்டு சகாயமேரி பெட்ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அதனை நோட்டமிட்ட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த காவலர்கள் பெட்ரோல் கேனை எடுத்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் பையில் மிளகாய் பொடி வைத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும்பொழுது யாரும் தகராறு செய்யக் கூடாது என தற்காப்புக்காக மிளகாய் பொடி வைத்திருந்ததாக சகாயம் மேரி காவலர்களிடம் தெரிவித்தார்.
0
0