பக்தர்களோடு பக்தராக வந்து கைவரிசை… அம்மன் கழுத்தில் இருந்த நகை திருட்டு ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியீடு..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 12:47 pm

நத்தத்தில் கோவிலில் அம்மன் சிலையில் இருந்து நகை மற்றும் பணத்தை பக்தர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ளது காளியம்மன் கோவில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு வழக்கம் போல் கோவில் திறந்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து யாரும் இருக்கின்றனரா என நோட்டமிட்ட பின்னர், கோவிலின் கருவறைக்குள் சென்று அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பக்தியுடன் அம்மனை வழிபட்டு கோவிலை விட்டு வெளியேறினார் திருட்டு பக்தர்.

திருடிய நகை மற்றும் ரொக்க பணத்தை பாக்கெட்டில் வைத்து வெளியேறிய திருட்டு பக்தனின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • 90s Favourite Actress Kanaka Recent News Goes Viral பரிதாப நிலையில் கனகா… காரணமே இவங்க தானா? போட்டுடைத்த பிரபலம்!
  • Views: - 384

    0

    0