நத்தத்தில் கோவிலில் அம்மன் சிலையில் இருந்து நகை மற்றும் பணத்தை பக்தர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ளது காளியம்மன் கோவில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு வழக்கம் போல் கோவில் திறந்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து யாரும் இருக்கின்றனரா என நோட்டமிட்ட பின்னர், கோவிலின் கருவறைக்குள் சென்று அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பக்தியுடன் அம்மனை வழிபட்டு கோவிலை விட்டு வெளியேறினார் திருட்டு பக்தர்.
திருடிய நகை மற்றும் ரொக்க பணத்தை பாக்கெட்டில் வைத்து வெளியேறிய திருட்டு பக்தனின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.