பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது..!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 11:25 am

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் வசித்து வந்த பழங்குடி பளியர்இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த சடையாண்டிபுரம், சிறுமலை அடிவாரத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின பளியர்இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக, அவ்வப்போது கொடைரோடு, அம்மைய நாயக்கனூர் கடைபகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், திண்டுக்கல், மதுரை பேசிய நெடுஞ்சாலை சடையாண்டிபுரம் பிரிவு அருகே டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த ரமேஷ் (39) என்பவர், அப்பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானதாகவும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சியமளா அமையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் போக்சோ மற்றும் பழங்குடியின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போல, இதற்கு முன் இரண்டு பழங்குடி பளியர்இன சிறுமிகள் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுள்ளதாகவும், இது குறித்து இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், இதற்கு முன் சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!