எந்த வசதியுமே இல்ல… அமைச்சரின் சொந்தத் தொகுதியில் கருப்புக்கொடி ; திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் புகார்..!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 12:08 pm

ஆத்தூர் அடிப்படை வசதிகள் செய்து தராதால் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுமக்கள் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான இத்தொகுதியில் உள்ள முன்னிலை கோட்டை ஊராட்சி. பண்ணப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

இவர்கள் அதிக அளவில் விவசாயக் கூலித்தொழிலாளராக வேலை செய்து வருவதாகவும், தங்களது பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. கேள்வி கேட்டால் ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுவதாகவும், தற்போது வரை அடிப்படை வசதிகள் எதுவும் தங்களது பகுதிக்கு செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மேலும், தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்று கூறியதால் திமுகவினர் நேற்று ஊருக்குள் வந்து மிரட்டி சென்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது பண்ணைபட்டி பகுதியில் ஊர் முழுவதும் கருப்பு கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்றச் சொல்லி பொதுமக்களை மிரட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?