வெடிமருந்துகள் வெடித்து உடல்சிதறி ஒருவர் பலி… கிணறு வெட்டும் பணியின் போது நிகழ்ந்த சோகம்!!
Author: Babu Lakshmanan13 March 2023, 12:56 pm
திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தலின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீரனூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வெடிவைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை சைய து வருகின்றனர்.
கிணறு வெட்டுவதற்காக வெடி மருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.