நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவன்!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 10:21 am

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் வசித்து வருபவர் காரைக்காலைச் சேர்ந்த பழனியப்பன் (வயது 51). அவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுகந்தி (வயது 33). நித்திஷ் என்ற மகன் உள்ளான்.

சமீப காலமாக பழனியப்பன் சுகந்தி நடத்தையில் மீது சந்தேகப்பட்டு இருவருக்கும் சண்டை சச்சரவு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் இன்று அதிகாலை 3 மணிக்கு, பழனியப்பன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுகந்தி தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!