வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை : தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!
Author: Babu Lakshmanan6 August 2022, 9:04 am
திண்டுக்கல்லில் அடையாளம் தெரியாத வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பழனி ரோடு சக்தி டாக்கீஸ் எதிரே உள்ள அரசு மதுபான கடை அருகே திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய லாரி பேட்டை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து நகர் மேற்கு போலீசா இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொலை சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.