“இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு”.. பாலா- சூர்யா படம் குறித்து கசிந்த புதிய தகவல்.!

Author: Rajesh
3 July 2022, 2:46 pm

இயக்குநர் பாலா, நடிகர் சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இந்த திரைப்படம் படம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் , இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பாலா என்றாலே ஒரு கதையை ரியாலிட்டியாக கொண்டு வந்து கண் முன் நிறுத்தி விடுவார். அவர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயினை ஒட்டுமொத்தமாக வேறு ஒரு நபராக மாற்றி விடுவார்.

இவர் இயக்கிய பிதாமகன் பிதாமகன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதில் விக்ரமை முற்றிலும் வேறு மாதிரியாக காட்டியிருப்பார். அதேபோன்று அவன் இவன் திரைப்படத்தில் விஷாலின் தோற்றமும் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி ஹீரோக்கள் மட்டுமல்லாமல் ஹீரோயின்களையும் அவர் அந்த கதாபாத்திரமாக மாற்றி விடுவார். அந்த வகையில் நான் கடவுள் படத்தில் பூஜாவை அந்த கேரக்டருக்கு ஏற்றார் போன்று அப்படியே மாற்றி இருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவை வைத்து படம் இயக்கி வரும் பாலா தெலுங்கில் பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தியை தேவதை போல் காட்டி வருகிறாராம் . இதனை பார்த்த ரசிகர்கள் “இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!