இன்று முக்கியமான நாள்… வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை எனில் அனைவரும் தீவிரவாதிகள் ; பாஜகவை வம்புக்கு இழுத்த பா.ரஞ்சித்!!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 4:18 pm

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இதனையடுத்து, அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் எழுந்தருளினார். பின்னர், கோவிலில் இருந்த சாதுக்களுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அவர்களிடமும் ஆசி பெற்றார். தொடர்ந்து, அயோத்தியில் பேசிய பிரதமர் மோடி, ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது என்றும், நூற்றாண்டு கால தியாகங்கள் மற்றும் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது எனக் கூறினார். மேலும், மக்கள் அனைவரும் வீடுகளில் இன்று மாலை ஸ்ரீராம தீபத்தை ஏற்ற வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், அனைவரும் தீவிரவாதிகள் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற புளூ ஸ்டார் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:- மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல படமாக புளூ ஸ்டார் இருக்கும்.

இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள் தான். அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது. தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது.

பிற்போக்குதனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவை பயன்படுத்துகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் தள்ளி விடாமல் இருக்க நம்மால் முடிந்ததை செய்வோம், எனக் கூறினார்.

  • Madha Gaja Raja movie review பொங்கல் ரேஸில்”மதகதராஜா”வெற்றி நடையா…கலக்கலான கமெண்ட்களை அள்ளி விடும் ரசிகர்கள்..!