“பிரமாண்டம்” பெயர் பறிபோகும் அச்சம்: ராஜமௌலிக்கு புதிய பட்டம் கொடுத்த இயக்குனர் சங்கர்… என்ன ஒரு புத்திசாலித்தனம்..!

Author: Rajesh
26 March 2022, 5:41 pm

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே கண் இமைக்கும் நேரத்தில் அனைவரது நினைவுக்கு வருபவர் இயக்குனர் சங்கர் தான். இன்றைய சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விடாதா? என்று கற்பனைக்கு எட்டாத கதைகளை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற கதாநாயகர்களை தன் படங்களில் நடக்க வைத்து வெற்றிப்படங்களை அள்ளிக் கொடுத்தவர். இதனாலேயே, இயக்குநர் சங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

ஆனால், இந்தியன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சனைகள், லைக்கா நிறுவனத்துடன் ஏற்பட்டள்ள மோதல் என அவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் ஏராளம்.
இந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் படம் பற்றி அவர் ட்விட்டரில் வியந்து பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

அந்த படத்தில் பயன்படுத்தபட்ட தொழிநுட்பங்கள் தென்ந்திய சினிமாவை இந்திய சினிமா துறையில் முக்கிய இடத்தினை பிடித்தது. தொடர்ந்து ராஜமௌலிக்கு பிராமண்ட இயக்குனர் என்ற பெயர் வைத்தே அழைக்கத் தொடங்கினர் தமிழ் ரசிகர்கள். இந்த நிலையில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்ப்பை படத்தின் காட்சிகள் பூர்த்தி செய்து வருகின்றன. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகள் பற்றி தான் ரசிகர்கள் தற்போது பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த படம் முதல் நாளில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்கள் எடுத்து புகழ்பெற்ற சங்கர் ஆர்ஆர்ஆர் படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டி இருக்கிறார்.

மேலும்’மகாராஜ’மௌலி என அவர் ராஜமௌலிக்கு பட்டம் கொடுத்து இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் என்னங்க பிரம்மாண்டம் உங்களுக்கு இல்லாம போகுமோ என்ற அச்சத்தில் இப்படி புது பட்டம் கொடுக்கிறீங்களா என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்