நடிகர் விஜய்-யை சந்தித்த இயக்குனர் சிவா.. வெளிவந்த காரணம்..!

Author: Rajesh
1 June 2022, 4:55 pm

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் தான் சிவா, அஜித்தின் வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார்.

இதில் ‘விசுவாசம்’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து ரஜினிகாந்தை வைத்து ‘ அண்ணாத்த’ படத்தை இயக்கினார் சிவா. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாகவே சொல்லப்பட்டது.

இதனையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்து நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தான் தற்போது விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் நடிகர் விஜய் தனக்காக ஒரு கதையை எழுதுமாறு சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 648

    0

    0