வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே பண்டிகைகள்… இனிமேலாவது சிந்தியுங்கள் ; இயக்குநர் தங்கர்பச்சான் போட்ட உருக்கமான பதிவு!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 4:57 pm

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- திணிக்கப்பட்ட தீபாவளியையும்‌, தமிழர்களின்‌ பொங்கல்‌ திருநாளையும்‌ வசதி படைத்தவர்கள்‌ மட்டுமே காலம்‌ காலமாக மகிழ்ச்சியுடன்‌ கொண்டாடுகின்றனர்‌.

இவ்வாறின்றி, பிள்ளைகளுக்காகவும்,‌ அக்கம்‌ பக்கத்தில்‌ உள்ளவர்களுக்காகவும்‌ படாத பாடுபட்டு பணம்‌ புரட்டி பண்டிகைகளை கடத்தும்‌ ஒவ்வொரு பெற்றோர்களும்‌ மகிழ்ச்சியுடன்‌ கொண்டாடும்‌ நாளே உண்மையான திருநாட்கள்‌!

நடைமுறைக்காக ஒவ்வொரு பண்டிகைகளுக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவிக்கும்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ இனிமேலாவது இம்மக்களின்‌ நிலையை எண்ணி இது குறித்தும்‌ சிந்திக்க வேண்டும்‌!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 434

    0

    0