தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டல்… தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

Author: Babu Lakshmanan
31 July 2023, 5:04 pm

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண், விக்னேஷ் குரு என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்காக கூடுதல் அபராதத்துடன் 4 லட்சம் கட்டவில்லை என்றால், வீட்டை ஜப்தி செய்வோம் என தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்து போன சிறுமணியம்மாளின் மாற்றுத்திறனாளி மகளான கவிதா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்ட நிலையிலும், மண்ணெண்ணைய் எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றதால் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!