பசுமை வீடு திட்டம்..’மாற்றுத்திறனாளி பெண் அலைகழிப்பு’: ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க தர்ணா!!
Author: Rajesh18 ஏப்ரல் 2022, 5:58 மணி
கோவை: இலவச பசுமை வீடு திட்டத்திற்கு அலைகளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6மாதத்திற்கு முன் கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் ஆசிரியராக உள்ள தேன்மொழி என்ற மாற்று திறனாளி விண்ணப்பம் அளித்துள்ளார்.
தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து 5முறை மனுவும் அளித்துள்ளார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பல முறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், இதுவரை தனக்கு இலவச பசுமை வீடு கிடைக்கப்படவில்லை எனவும், தன்னை மாற்றுதிறனாளி என்றும் பாராமல் அலகளிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் மாற்று திறனாளி அலுவலர் தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு பெற்று தருவதாக உறுதியளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்குள் அழைத்து சென்றனர்.
0
0