வி.கோட்டையூர் வீரமாகாளியம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு திருவிழாவானது இந்து சமய அறநிலை அறநிலைத்துறை மூலம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழா அழைப்பிதழில் குறை இருப்பதாக கூறி ஒரு தரப்பினர் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தனி வட்டாட்சியர் வில்லியம் மோசஸஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த சமாதான கூட்டத்தில் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு தரப்பினரையும் ஒன்றிணைத்து சுமூகமாக விழா கமிட்டி ஏற்படுத்தி கும்பாபிஷேக திருவிழாவினை சிறப்பாக நடத்துதல் வேண்டும், மேற்கண்ட திருவிழாவில் சட்டஒழுங்கு பிரச்சனைகள் ஈடுபடும் நபர்களின் மீது காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேற்கண்ட குடமுழுக்க திருவிழா ஆனது யாருடைய தலைமையிலும் நடைபெற கூடாது, மேலும் கும்பாபிஷேக விழாவில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குதல் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…
சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
This website uses cookies.