திருமணமாகாத விரக்தி… சரவண பொய்கையில் குதித்து ’90s கிட்’ இளைஞர் தற்கொலை ; மதுரையில் சோகம்..!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 5:59 pm

திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மகன் ராஜராஜன். இவர் மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ராஜராஜன் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் ராஜராஜனின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதை கேட்டு ராஜராஜனுக்கு மேலும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு வந்த ராஜராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராஜராஜனின் உடலை வீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vishal-Suchitra viral video நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
  • Views: - 401

    0

    0