ஸ்கேட்டிங் பயிற்சியின் போது விபரீதம் : நீச்சல் குளத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலி.. ஒருவர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 2:33 pm

திருப்பூர் : ஸ்கேட்டிங் பயிற்சி க்கு சென்ற போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீசித்து, பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைபவ் (வயது 5), 1 ம் வகுப்பு படித்து வந்தான். வைபவ் திருப்பூர் டி.டி.பி. மில் சாலையில் உள்ள நீச்சல்&ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் ஸ்கேட்டிங் பயின்று வந்தான்.


நேற்று மாலை ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கழிப்பறைக்கு சென்ற வைபவ் அதன்பிறகு காணவில்லை. இதையடுத்து அவனை மற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவன பணியாளர்கள் தேடினர்.

அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் வைபவ் இறந்து கிடந்தான். இது குறித்து உடனடியாக 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வைபவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.

நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து , ஸ்கேட்டிங் நிறுவன உரிமையாளர் ஜோதிபாசுவை 15 வேலம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1770

    0

    0