100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதா? மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய திருமா… முதல்வருக்கு கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 4:57 pm

திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ள நிலையில் அந்ததியின மக்களுக்கு குடியிருக்கும் இடத்தை நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் அருந்ததியினர் காலனியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியாக உள்ளது என்றும் இந்த பகுதியில் உள்ள அருந்ததியின மக்கள் 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருந்ததியின அருந்ததிய மக்களை காலி செய்யக் கோரியதை கண்டித்து சாமலாபுரம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் 12-வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பனிரெண்டு நாட்களாக போராடிவரும் அருந்ததியின மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

மேலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறையாக வசித்துவரும் மக்களுக்கு குடியிருப்பு பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்கவேண்டும் எனவும் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1679

    0

    0