‘என்னை ஏன் ஜாமீன்ல எடுக்கல’…மதுபோதையில் நண்பர்களிடையே தகராறு: இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து…ஆபத்தான நிலையில் சிகிச்சை..!!

Author: Rajesh
26 April 2022, 1:58 pm

சென்னை: குற்ற வழக்கில் கைதான நண்பர்களை ஜாமீனில் எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி தாசாமகான் 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் இவரது தம்பி அபி ( எ ) அபிமன்யு. அண்ணன் தம்பி இருவரும் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

நசீர், தேவேந்திரன், அபிமன்யு 3 பேரும் சேர்ந்து திருவான்மையூர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வழக்கில் தேவேந்திரன் மற்றும் அவரது தம்பி அபிமன்யு ஆகிய இருவர் மட்டும் ஜாமினில் வெளியே வந்தனர். நசீரை இவர்கள் ஜாமினில் வெளியே எடுக்கவில்லை. அதன் பிறகு சில மாதங்கள் சிறையில் இருந்த நசீர் சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஓட்டேரி பி.எஸ் மூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நசீர் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தேவேந்திரனை அழைத்து ஏன் என்னை ஜாமீனில் வெளியே எடுக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தேவேந்திரன் வீட்டிற்குச் சென்று தனது தம்பி அபிமன்யுவிடம் நடந்ததைக் கூறி வீட்டிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு இருவரும் நசீர் மது அருந்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து நசீரை ஓங்கி கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளனர்.

இதில் நசீருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி அங்கேயே மயங்கி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1184

    0

    0