சீமான் கேவலமான அரசியல் செய்கிறார்… கூண்டோடு விலகிய கோவை நாம் தமிழர் நிர்வாகிகள்!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2024, 1:29 pm
நாம் தமிழர் கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், ஒட்டுமொத்த வடக்கு மாவட்டமும் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளோம். இப்போது பொறுப்பாளர்கள் விலகுகிறோம். மக்கள் இன்றும் அண்ணியமாக எங்களை பார்க்கின்றனர்.
உறவினர்கள் கூட எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் அருந்ததியினர் சமூகத்தை பற்றி பேசும்போது களத்தில் உள்ள எங்களை போன்றோருக்கு பிரச்னையாக உள்ளது.
வேட்பாளர் தேர்தலில் தொய்வு உள்ளது, வழி நடத்தக்கூடிய அடுத்த கட்ட தலைமை இல்லை ஆகிய காரணங்களால் விலகுகிறோம். வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் 20 பேர் விலகுகிறோம்.
இதையும் படியுங்க: 10-ம் வகுப்பு மாணவியை பலமுறை பயன்படுத்திய 7 பேர்.. ஊட்டியை உறைய வைத்த சம்பவம்!
எங்களுடைய பணிக்கு மதிப்பதில்லை. மலையாளம், தெலுங்கர்கள் என பல மொழி பேசுபவர்கள், சமூகத்தினர் உள்ளனர். அவர்களுடன் நண்பர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் மொழி ரீதியாக பேசுவதை ஏற்றுக்கொள்வதில்லை, 15 ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.சீமான் வெற்றி பெறுவார், அதிகாரத்தில் வருவார் என்று எண்ணினோம்.
கொள்கை பார்த்து வருகிறோம். அதற்கு மாற்றாக முன்னுக்கு பின் செயல்படுகிறார். உள்ளூர் பிரச்சனையை தலைமைக்கு சொல்ல ஆள இல்லை. ஓராண்டாக பிரச்னைகளை சொல்லி வருகிறோம்.
தென் மாவட்டங்களுக்கு 2 சமூகத்திற்கு பிளவு ஏற்படும் வகையில் பேசுகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் தொடர்பாக பேசுகிறார்.கொள்கையில் இருந்து விலகுவதால் இந்த முடிவு எடுக்கிறோம்.
மாநிலம் முழுவதும் தொண்டர்கள் இதே நிலையில் தான் உள்ளார்கள். தலைமையில் பிரச்னையில் இல்லை கட்சி கட்டமைப்பு சரியாக இல்லை அதிமுக, திமுக வலிமையான கட்டமைப்புடன் உள்ளனர்.வெற்றியை நோக்கி பயணிக்க முடியவில்லை. திராவிட அரசியல் விட மோசமான அரசியலை முன்னெடுக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் மாநாட்டு கூட்டம் வாக்காக மாறாது.விஜயுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி வரவேற்கிறோம் ஆனால் நாங்கள் தான் தலைமை என்று முடிவுடன் உள்ளார். வேறு கட்சியில் இணையும் முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.