வெயிலில் தவித்த அணில்குட்டிகள்…’பாசக்கூடு’ கொடுத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்: வைரலாகும் வீடியோ!!

Author: Rajesh
23 April 2022, 1:34 pm

ராணிப்பேட்டை: வெயிலில் தவித்துக் கொண்டிருந்த 4 அணில் குட்டிகளை மீட்டெடுத்த மாவட்ட ஆட்சியரின் செயலை கண்ட அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வாருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது மரத்தில் இருந்து அணில் குட்டிகள் கீழே விழுந்து வெயிலில் தவித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்துள்ளார்.

https://vimeo.com/702308381

மாவட்ட ஆட்சியர் உடனே அதனை மீட்டெடுத்து அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தின் மேற்கூரையில் பாதுகாப்பான கூடு அமைத்து அணில் குட்டிகளை அதில் விட்டார். அப்போது அங்கிருந்த பணியாளரிடம் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வு அங்கிருந்தவர்களிடையை ஆட்சியரின் இரக்க செயலை கண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி