கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் 52வது காவல் கண்காணிப்பாளராக ஹரிகிரன் பிரசாத் இன்று பொறுப்பேற்றுள்ளார். அதை தொடர்ந்து தனது முதல் பணியாக தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 52வது காவல் கண்காணிப்பாளராக ஹரிகிரண் பிரசாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்பு போலீஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரிநாராயணன் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதை அடுத்து சென்னை தி நகர் துணை கமிஷனராக இருந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட எஸ்பி யாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகை புரிந்தார். பின்னர் குமரி மாவட்டத்தின் 52வது எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பொறுப்பேற்ற மறுகணமே தனது தாய் தந்தைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தெரிவித்த போது தான் இந்த நிலையில் இருப்பதற்கு முழு காரணமும் தாய் தந்தையே அவர்கள் இல்லாமல் இந்த நிலைக்கு நான் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக தான் பணியில் இணைந்த உடன் இந்த செயலை அரம்பித்தேன். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்”கன்னியாகுமரி மாவட்டம் நமது நாட்டின் மிக முக்கியமான பகுதியாகும் இந்த மாவட்டத்தில் எஸ்பியாக பொறுப்பேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது இங்கு பணியாற்றியுள்ள பல மூத்த போலீஸ் அதிகாரிகள் இப்போது உயர்ந்த பதவிகளில் உள்ளனர் கல்வியறிவு அதிகம் உள்ள மக்கள் இருக்கும் மாவட்டம் ஆகும், மேலும் இதற்கு முன் இருந்த காவல்துறை அதிகாரிகள் பல சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அந்த நடவடிக்கைகள் தொடரும் மக்களுக்காக காவல்துறை 24 மணி நேரமும் செயல்படும் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் மக்கள் தெரிவிக்கலாம். மக்கள் முழுமையாக நம்பும் வகையில் தனது பணி இருக்கும் என புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.