விவாகரத்து பண்ணிட்டு என் போட்டோவ ஆபாசமா சித்தரித்து டார்ச்சர் பண்றாரு : நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளிக்க முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 4:51 pm

விவாகரத்தான தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டு டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண். இவருக்கும் பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆன நிலையில் முன்னாள் கணவர் அவரை அடிக்கடி நேரில் சென்று வாழவிடாமல் டார்ச்சர் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண் வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை குறித்து தவறாக பேசியும், அவரது புகைப்படத்தை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து முன்னாள் கணவரும், கணவரது உறவினர்களும் வலைதளத்தில் பதிவிடுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மன விரக்தி அடைந்த அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி, சமரசம் பேசி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 529

    0

    0