1-கிலோ ஆட்டுக்கறி 1000 ரூபாய்..! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுவிற்பனை படு ஜோர்..!

Author: Vignesh
24 October 2022, 11:35 am

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தீபாவளிப்பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு அசைவ உணவுகள் தயார் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று இறைச்சி வாங்குவதற்காக கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் இறைச்சி வாங்கிச்செல்கின்றனர்.

குறிப்பாக நெல்லையில் மட்டன் கிலோ 1000 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 220 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இறைச்சிகளின் விலை சிறிது அதிகரித்து காணப்பட்டாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கிச்செல்கின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 412

    0

    0