தடையை மீறி தேமுதிகவினர் பேரணி.. அரசியல் காழ்ப்புணர்ச்சியா?

Author: Hariharasudhan
28 December 2024, 9:55 am

கேப்டன் விஜயகாந்த் நினைவுநாளில், அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிக பேரணி நடத்தப்படுகிறது.

சென்னை: திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகமான கேப்டன் ஆலயத்தில் இன்று நடைபெறுகிறது.

இதனையொட்டி, தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் என பலரும் தேமுதிக அலுவலகம் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, கேப்டன் நினைவு நாளான இன்று, அமைதி பேரணி நடத்துவதற்கு காவல் துறையில் அனுமதி கேட்கப்பட்டு இருந்து உள்ளது.

ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும், அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தடையை மீறி, தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணியாகச் செல்கின்றனர்.

Captain Vijayakanth death anniversary rally

இதன்படி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இருந்து, விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்கிறது. மேலும், பேரணிக்கு அனுமதி மறுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா? என்று தெரியவில்லை என தேமுதிக துணை செயலாளர் கே.பார்த்தசாரதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையும் படிங்க: தம்பி ஓரளவுக்கு தான் கொல காண்டில் விராட்கோலி…ஷாக் ஆன ஆஸ்திரேலியா ரசிகர்கள்…!

அது மட்டுமல்லாமல், கடந்த டிசம்பர் 5ஆம் தேதியே இதற்கான அனுமதி கேட்டதாகவும், நேற்று மாலையே அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்த கேப்டன் விஜயகாந்த் காலமாகி ஓராண்டு ஆன நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி