ரொம்ப டார்ச்சர்.. மனஉளைச்சலில் தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 7:55 pm

கடும் மன உளைச்சலால் தேமுதிக நிர்வாகி மனைவி, இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழநத்தம் ரோட்டு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் கோவிந்தசாமி வயது (40). தேமுதிக நிர்வாகியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனமான எல்.அண்.டி மற்றும் ஸ்ரீராம் சிட்பன்ஸில் கோவிந்தசாமி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் தொடர்ந்து வாங்கிய கடனை முறையாக கோவிந்தசாமி கட்டினார். இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் அவரால் வாங்கிய கடனை சரிவர கட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில் அந்நிறுவனம் அவருக்கு வட்டி மேல் வட்டி போட்டு கூடுதல் பணத்தை கட்டுமாறு தொடர்ந்து கோவிந்தசாமியை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்தும் தொலைபேசியிலும் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளனர். இதனிடையே கோவிந்தசாமி உடல் நலம் பாதிக்கப்படும் சரிவர வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி உரிய முறையில் செலுத்துவதாகவும் உறுதிமொழி அளித்த நிலையில் தொடர்ந்து அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கடனை கட்டவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தசாமி இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்களால் டார்ச்சரை சந்தித்த கோவிந்தசாமி கடந்த சில நாட்களாகவே வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று விரக்தியில் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தவரை காப்பாற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்பாக கோவிந்தசாமி தனியார் நிதி நிறுவன ஊழியர் செய்யும் டார்ச்சரை வெளிப்படுத்தி தாம் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோவிந்தசாமியின் இறப்புக்கு காரணமான தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கோவிந்தசாமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் போராட்டம் நடத்த தயங்கமாட்டோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இது குறித்து கோவிந்தசாமியின் உறவினர்கள் தெரிவிக்கையில் இறந்து போன கோவிந்தசாமி கூலி தொழிலாளி என்றும் சரியான வீடு கூட அவர்களுக்கு இல்லை என்றும் வருமானமே இல்லாத நிலையில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு தற்போது உடலை நல்லடக்கம் செய்வதற்கும், ஈமச்சடங்கு செய்வதற்கு கூட வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே கோவிந்தசாமியின் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 488

    0

    0