அரைக்கம்பத்தில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி : உடைந்து போன பிரேமலதா கூறிய உருக்கமான வார்த்தை!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 6:48 pm

அரைக்கம்பத்தில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி : உடைந்து போன பிரேமலதா கூறிய உருக்கமான வார்த்தை!

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சிக்கொடியை முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இன்று ஏற்றியுள்ளோம்.

தேமுதிக கட்சி கொடி ஏற்றும்போது கயிறு அரை கம்பத்தில் அருந்து விழுந்த சம்பவத்தை தடைக்கு பின்னால் அமையும் வெற்றியாக பார்க்க வேண்டும்.

தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம். விஜயகாந்த் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன.

வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை விரைவில் தொடங்குவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!