என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 5:36 pm

கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஆலங்குளம் வந்த தேமுதிக பொதுச் செய்லாளர் பிரேமலதா தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: திருநெல்வேலி – தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளது.

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் 4 பள்ளிகள், இடுகாடு, 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அங்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டு தற்போது பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Prema Supports Vijay

இந்தச் சாலையில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சென்று வர ஏதுவாக பாதை அமைக்க வேண்டும்.

இல்லையெனில் தேமுதிக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். 2026 தேர்தலிலும், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஏற்கனவே உள்ள கூட்டணியே தொடரும் என்றார்.

இதையும் படியுங்க: லாட்டரியில் அடித்த ஜாக்பாட் : 5 வருட காத்திருப்புக்கு ரூ.12 கோடிக்கு அதிபதி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்யாமல் மக்களை அவர் இடத்திற்கு வரவழைத்து உதவி செய்தது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, உதவி செய்ததைத்தான் பெரிதாக பார்க்க வேண்டும்.

Dmdk Supports TVK

விஜய் மட்டுமல்ல அனைத்து மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார். சாத்தனூர் அணை முன் அறிவிப்பு இன்றி திறந்தது தான் விழுப்புரம் , கடலூர் மாவட்ட கிராமங்கள் அவதிக்கு காணம் எனவும் கூறினார்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!