திமுக தில்லுமுல்லு செய்வார்கள் என்றும், 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள் என்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தள்ளார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் கை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: அமைச்சருக்கு பதிலாக நல்ல ஜோதிடராகலாம் ; அமைச்சர் உதயநிதி குறித்து ஜிகே வாசன் விமர்சனம்!!!
பிரச்சாரத்தின் பிரேமலதா பேசியதாவது ;- திண்டுக்கல் என்றால் பூட்டு தொழில் நலிவடைந்துள்ளது. அந்தத் தொழிலை பாதுகாப்போம். சிறுமலை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் பேருந்து நிலையம் புறநகர் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் நிச்சயமாக உருவாக்கிக் கொடுப்போம். கொடைக்கானலில் வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சின்னாளப்பட்டி சுங்குடி சேலை மிகவும் பிரபலம். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விற்பனை மேம்படுத்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும் விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் இரண்டு கண்களாக திண்டுக்கல்லில் கொண்டு வந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
திண்டுக்கல்லில் மாணவிகள் பயில மகளிர் கல்லூரி உள்ளது போல, மாணவர்கள் பயில்வதற்கான அரசு கல்லூரி கொண்டு வரப்படும். திண்டுக்கல்லில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விவசாயிகளுக்கு உரிய விலைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். சிறுகுரு தொழில் இவ்வளவு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக அளவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்குடி நத்தம் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை திட்டம் அமைத்து தரப்பட நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் பழனி போகர் சேவை திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிப்படையாமல் சுற்றுலா மேம்படுத்தப்படும். கொடைக்கானலில் கேபிள் கார் திட்டம் கொண்டு வரப்படும்.
மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!
இதுவரை திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் எந்த திட்டத்தையும் திண்டுக்கலுக்கு கொண்டு வரவில்லை. ஆனால் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் வெற்றி பெற்று திண்டுக்கல் நாடாளுமன்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார். ஏடிஎம்கே நான்கு எழுத்து.. தேமுதிக நான்கு எழுத்து, எஸ்டிபிஐ நான்கு எழுத்து, நாங்கள் அமைத்துள்ள கூட்டணி நான்கு. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி ஜூன் 4. மகத்தான வெற்றி கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. திமுக தில்லுமுல்லு செய்வார்கள். எனவே 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள், என்று கூறினார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.