‘பழைய தலைவர் தான் வேணும்’ ; குளுக்கோஸ் பாட்டில் டியூப்பால் விஜயகாந்த்தின் படத்தை வரைந்த ஓவியர்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 4:47 pm

கள்ளக்குறிச்சி அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு குளுக்கோஸ் பாட்டிலில் நீர் வண்ணத்தை ஊற்றி, அதிலிருக்கும் டியூப் வழியாக, விஜயகாந்த்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி சங்கக் கடன்களை அடைத்தார்.

ரசிகர்களின் பேராதவரோடு 2005 ஆம் ஆண்டில் ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் இவருடைய தேமுதிக தமிழக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப் பட்டது. இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார், அதன் பிறகு முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பது வழக்கமாக கொண்டிருந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டும், பூரண குணமாகிவிட வேண்டும் என்பதே பலரின் விருப்பம். அவரின் உதவும் குணத்துக்கும், செய்த தொண்டுகளுக்கும் பிரதிப் பலனாக பூரண குணத்துடன் மீண்டும் வருவார் கேப்டன் விஜயகாந்த் என்று வேண்டியும், எந்தவித பிரஷ் பயன்படுத்தாமல்! தெம்பு தரக்கூடிய குளுக்கோஸ் பாட்டிலில் நீர்வண்ணத்தை ஊற்றி அந்த பாட்டிலில் இருக்கும் டியூப் வழியாக வரும் வண்ணம், டியூப்பை பிடித்துக் கொண்டு விஜயகாந்த் படத்தை எட்டு நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.

https://player.vimeo.com/video/857846307?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள், விஜயகாந்தின் தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் ஓவியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 494

    0

    0