முறைகேடு புகார் கூறிய கவுன்சிலர் மீது அவதூறு…. வாயில் கருப்பு துணி கட்டி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 5:53 pm

திருவள்ளூர் ; ஆரணி பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வாயில் கருப்புத் துணி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பொன்னரசி நிலவழகன் 13வது வார்டு திமுக உறுப்பினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் பொன்னரசி குறித்து அவதூறாக துண்டு பிரசுரங்களை ஓட்டியும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்க மாத்திரைகளை உண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் செயல் அலுவலர் கலாதரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு கொடியை கட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக பெண் வார்டு உறுப்பினருக்கே திமுக ஆட்சியில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி, அவதூறு பரப்பிய நபரை கைது செய்ய வேண்டும் என அதிமுக, திமுக, சுயேட்சை வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!