ஐடி ரெய்டில் ஈடுபட்ட அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர் : பெண் அதிகாரியுடன் கடும் வாக்குவாதம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 9:45 am

கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இல்லமான கரூர் ராமகிருஷ்ணபுரம் இரண்டாவது தெரு பகுதியில் உள்ள அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, கோவை மற்றும்கரூர் பகுதியில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் பகுதிக்கு, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் ஆதரவாளர்கள் வந்துள்ளனர்.

அதிகாரிகள் வந்த வாகனத்தில் இருந்து இரண்டு பைகளில் ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகிய பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறிப்பாக இந்த வருமான வரி துறை சோதனையின் போது மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று மாநகராட்சி மேயர் தலைமையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் நிர்வாக நலன் கருதி வருகின்ற 29. 5. 2023 ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வருமான வரி சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் இருந்த லேப்டாப் எடுப்பதற்காக வந்த போது 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெளியே போங்கள் என்று கூச்சலிட்டு தள்ளி விடுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் ஒரு காவல்துறை கூட சம்பவ இடத்திற்கு வராதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் வந்த வாகனத்தில் இருந்து இரண்டு பைகளில் ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகிய பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.

கரூரில் அசோக் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட 1 பெண் உட்பட வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேரையும் முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வெளியே இழுத்து வந்துள்ளனர்.

தற்போது அசோக் வீட்டை மூடி உள்ளனர். சோதனைக்கு வருகை தந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சோதனைக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த போது, அவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துள்ளனர்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ