இலவச மிதி வண்டி திட்டத்தை கொண்டு வந்தது திமுக… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 9:52 pm

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதி வண்டி திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாவட்டத்தில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்.அமுலு மேயர் சுகாஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,கவுன்சிலர் அன்பு,மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது

இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

காட்பாடி அரசு பள்ளி விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டம் என்பதால் அதனை நாங்களும் தொடர்கிறோம் என்று பேசினார். பின்னர் விழாவில்பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நந்தகுமார் சொன்னது தவறு இது 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை தான் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்று பேசினார்.

இது அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்